Categories
News

ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும் பாலின, பாலியல் அரசியலும் – © கோபி ஷங்கர்

இந்தியா என்று வரையறுக்கப்படும் இந்த பிரதேசத்தில் எழுந்த மெய்யியல் தத்துவங்களை 
உலகம் அறியச் செய்த பெரும் பங்கு சுவாமி விவேகானந்தருக்கு உண்டுமிகவும் பரந்த கண்ணோட்டத்துடன் மதஇனஅரசியல்கொள்கை சார்பற்ற இந்த ராமகிருஷ்ண மிஷன் மற்றும் ராமகிருஷ்ண மடம் 1897ல் துவங்கப்பட்டது

இங்கும் ஆண்பெண் என்ற இருமை நிலையை மிகவும் பரவலாக மிஷனின் அனைத்து 
நடவடிக்கைகளிலும் தென்படுகிறதுஆண்களுக்கு ஸ்ரீ  ராமகிருஷ்ண மடமும்பெண்களுக்கு ஸ்ரீ சாரதா மிஷன் மற்றும் மடம் உள்ளது

ஆனால் இன்று சுவாமி விவேகானந்தர் வாழ்ந்திருந்தால் பிற பாலினத்தவருக்கான 
மடங்களும் உருவாகியிருக்கலாம்பொதுவாகவே பெரும்பாலன மத நிறுவனங்களுக்கு 
காமம்பாலினம்பாலியல் இவற்றிற்கு இடையில் இருக்கும் வித்தியாசம் கூட தெரிவதில்லைஇந்த மூன்றையும் ஒன்றென நினைத்துக்கொள்கின்றனர்இதைப்பற்றியான ஒரு 
விவாதத் தளங்கள் எழுவதற்கான வாய்ப்புகள் அங்கு ஏற்படுவதில்லைஇதில் முக்கியமாக 
ராமகிருஷ்ண மடங்களில் இன்று இருக்கும் பல ஆழ்ந்த கருத்துக்களை பரந்த நோக்குடன் 
அணுகுகின்றனராஎன்பது கேள்விக்குறியதாகும்

ஆண்பெண் ஏன் தான் ஒரு மனிதன் என்பதை கூட மறந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
பெண் போல் உடையணிவதும் பாலின நகர்வியல் பாணியில் நடனமாடி நலினத்தை 
வெளிப்படுத்துவதும்ஹிஜிரா சமூகத்தை சேர்ந்தவர்களை அரவணைத்தலும் மிகவும் 
குறிப்பிடத்தக்கதுஇந்தியாவின் முதல் ஒருபால் ஈர்ப்புடையவர்களுக்கான அமைப்பை 
ஏற்படுத்திய அசோக்ராவ் காவி என்பவர் கூட ராமகிருஷ்ண மடத்தில் பிரமச்சாரியாக இருந்து வெளியேறியவர்தான்.

                                 மேலும் 1995ல் வெளியான ஜெஃப்ரி கிருப்பால் எழுதிய காளியின் குழந்தை
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையின் பாலுணர் வெழுப்பும் மறைபொருளும் என்ற புத்தகம் 
பெரும் சர்ச்சையை கிளப்பியதுஇதற்கான சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் 
இருக்கிறதுஇந்த புத்தகத்தை ஜெஃப்ரி கிரிபால் எழுத ஆலோசனை வழங்கியவர் 
சர்ச்சைக்குரிய வெண்டி டோணிகர் ஆவார்இந்த புத்தகம் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஆன்மீக 
சாதனை முறைகளைப் பற்றி மேலும் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் அவரது சீடர்களுக்கும் இருந்த நெருங்கிய உறவைப் பற்றி விவாதத்தை எழுப்பியது

கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்பட்டன.இந்த புத்தகமானது ஒரு மேற்கத்திய உளநிலை பொருள் கோளியல் கண்ணோட்டத்துடன் மிகவும் தெளிவற்ற நிலையில்தான் 
எழுதப்பட்டது

இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் உள்ள உறவு ஒருபால் உறவாக பதிவு 
செய்யப்பட்டுள்ளதுஇங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிசன் மற்றும் மடத்தில் பாலின மற்றும் பாலியல் சார்ந்த விசயத்தில் தெளிவான கண்ணோட்டம் இல்லாததால் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையாக மடத்தில் இவை உருவாகியுள்ளனகுறிப்பாக ஒருபால் ஈர்ப்பு,மாற்று பாலினத்தவர் என சமூக விழிம்புநிலை அங்கங்களில் வாழும் மக்களின் 
பிரச்சனைகளை பற்றி வெளிப்படையாக பேச இன்றுவரை மிஷன் முன்வரவில்லை
ஒருபால் ஈப்பை மிஷன் கொச்சையாக பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் 
இவை அனைத்தயும் மீறிய மற்றும் உள்ளடக்கிய ஒருவராக என்றும் திகழ்வார்

ஸ்ரீ ராமகிருஷ்ண மிசன் மற்றும் மடம் பொதுவாவே பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த 
விசயத்தில் தயக்கம் காட்டுவது உண்டு . ஆரம்ப காலக்கட்டத்தில் கிரிப்பாலின் புத்தகத்தை 
மடம் கண்டு கொள்ளவில்லைகிரிப்பாலின் புத்தகம் வெளியாகி 10 வருடத்திற்கு பிறகு இந்த புத்தகத்தில் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் விதமாக 2010ம் ஆண்டு அமெரிக்க வேதாந்த சொசைட்டியைச் சேர்ந்த சுவாமி தியாகானந்தரும்ப்ரவ்ராஜிக்கா வ்ரஜப்ராணா  மாதாஜி அவர்களும் ”ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு விளக்கம் காளியின் குழ்ந்தை ஒரு பரிசீலனை”  என்ற 
புத்தகத்தை வெளியிட்டனர்இதன் விளைவாக கிருப்பால் தன் புத்தகத்தை உண்மையான 
சூழ்ச்சித் திறத்துடன் கையாண்டு பல விசயங்களை திரித்துள்ளார் என்பது தெரியவந்தது


Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. ISBN 9781500380939.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s