Categories
News

ஒருபால் காதல் எண்ணங்கள் – கோபி ஷங்கர் © Srishti Madurai.

பாலினம் (Gender) மற்றும் பாலின ஈர்ப்பு (Sexual or Gender attraction) என்பது மதம் கிடையாது அதை  பரப்புவதற்கு அடிப்படையாக ஒரு தனி நபர்  தன்னுடைய பாலினத்தையும், பாலினஈர்பையும் புரிந்துகொள்வது மிகப் பெரிய கடினமான விஷயம், தன்னை பற்றியும் தான் வாழும் உடலை பற்றியும் தெளிவான புரிதல் வேண்டும். அடிப்படைவாத பாலியல் இருமை கொள்கையாலும், முடக்கு தனமான கலாச்சார , மத, அரசியல் மற்றும் குறுகிய லட்சியவாத  சிந்தனையாலும் பாலினம் சார்ந்த மக்களின்     கண்ணோட்டம்  களவியல் என்ற சிந்தனையுடன் நின்றுவிடுகிறது. 

இங்கு நான் ஒருபால் ஈர்ப்பை பற்றி பேச விரும்பிகிறேன்.
பேசும் முன் ….ஒருபால்ஈர்ப்பு என்பது ஒரு பாலின ஈர்ப்பு இது ஒரு பாலினம் இல்லை. திருநங்கை சமூகத்தில் இது கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. திருனருக்கும் ஒருபால்ஈர்புக்கும் ரொம்ப தூரம் இரண்டும் எதிர் முனை போல. திருனருகுள் இருக்கும் ஒருபால் ஈர்ப்பை பற்றி மற்றொரு  கலந்துரையாடலில் பார்க்கலாம்.



ஒரு ஆண், பெண் எதிர்பால் காதல் உறவைப்  போலத்தான்  ஒருபால் காதல் உறவும் இங்கு ஆண், பெண் என்ற இருமை இல்லை. எப்போதும் காதல், காமம், நட்பு, பாசம் என்ற பெயர் கடந்த மனதை நிறைக்கும் உறவை பெறுவது ஒரு அழகான வாழ்க்கையின் ஆரம்பம்.
ஆண்களை விரும்பும் எல்லா ஆண்களுக்கும்  பெண்களை பிடிக்காது என்ற அவசியம் இல்லை.  ஒரு ஆண் தான் மற்றொரு ஆண் மீது வைத்திருக்கும் காதலை வெளிபடுத்துவது என்பது இன்றைய சமூகத்தில் மிகவும் கடினம். குடும்பம், ஜாதி, மதம்,என்று படித்த மற்றும் படிக்காத முட்டாள்கள் என்று பல காரணத்தை இதற்கு  காட்டலாம் .முதலில் ஒரு ஆண் தன் காதலனாக கருதும் ஆணிடம் இதை வெளிப்படையாக  பேச அதிக மனத்தெளிவும், தைரியமும் வேண்டும். பெரும்பாலான ஓரின காதல் வெறும் நட்பு என்ற போலி போர்வையில் மறைந்து விடுகிறது. ஓரினம் சார்ந்து களவியலில் ஈடுபடும் எல்லா ஆண்களும் ஒருபால் காதல் ஈர்ப்பு உள்ளவர்களாக மாறி விட மாட்டார்கள். தனிநபர் சார்ந்த தனிப்பட்ட விஷயம் தான் இது.
எப்படி எதிர்பால் ஈர்ப்பு காதலில் ஒரு பெண்ணுக்கு பிடித்ததை ஆண் செய்கிறானோ அதை போல் இங்கு ஒரு ஆணுக்கு பிடித்ததை இன்னொரு ஆண் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பான். அவனுடைய நடை, உடைகளில் மிகவும் கவர்ச்சிகரமாக தன் காதலனுக்கு தெரிய வேண்டும் என்று ஆசை படுவான். மணிகணக்கில் தன் காதலனுடன் அர்த்தமற்று  உரையாட வேண்டும் என்ற ஆசை இங்கும் முதல்  காதல் வாய்ப்பவர்களுக்கு உண்டு.


சிறிய பிரிதல் கூட பெரிய துயரத்தை தரும். பெரும்பாலான ஓரின காதல் வயப்படும் ஆண்கள் தங்கள் மீது அதிக அக்கறையும், கனிவும், செயலில் நிதானமும்  உள்ள ஆண்களை தான் நேசிக்கிரர்கள். சமீப காலமாக பணம், அந்தஸ்து, நிறம், உடல் கட்டமைப்பு, ஆழகு, குடும்ப சூழ்நிலை, பார்க்கும் வேலை என உலகியல் சார்ந்த விஷயங்களை ஓரின காதல் மலரும் மனங்களில் காண முடிகிறது. தன்னுடைய தற்காப்பை பொருளாதார ரீதியாக முதன்மைபடுத்தி காதலுக்கு இரண்டாம் இடம் அளிக்கும் நிலை எல்லா வகை காதலிலும்  இன்று காணலாம். பெரும்பாலான  ஓரின காதலர்கள் தங்கள் விரும்பும் ஆண் இன்று சமூகம் வரையறுக்கும் அதிக, அதித ஆண்மை தன்மையுடன்  இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.   
இரு ஆண்களும் ஒரு புரிதலுடன் இருந்தால் சந்தோஷம் தான் அனால் ஓரின காதலில் பெரும்பான்மையினர் எதிர்பால் நட்டம் உள்ள நபரை நேசிப்பது மிகவும் அபாயகரமானது. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் அந்த காதலே அந்த நபரை கொன்றுவிடும்.காதலை ஏர்க்கமுடியாது போகும்போது அங்கே நட்புறவும் நின்றுபோய் விடுகிறதே! இனிமேல் நாம் சந்திக்க வேண்டாம் என்று பிரிந்துவிடவே செய்கிறார்கள்!

ஆண்கள், நண்பர்களாக இருக்கும் போது செய்யும் போனை விட, காதல் வந்த பின்னர் தன்  காதலனுக்கு அடிக்கடி போன் செய்வார்கள். ஒரு நாள் கூட பிரிந்திருக்க முடியாத நிலையில், விடுமுறை நாட்களில் தேடி வந்து, வெளியே செல்லலாம் என்று அழைப்பார்கள். பிறந்த நாள் வந்தால், எதிர்பார்க்காத வகையில் நீண்ட நாள் ஆசையாக மனதில் வைத்திருக்கும் பொருட்களை வாங்கிக் கொடுத்து, மகிழ்விப்பார்கள்.  அடிக்கடி கோபப்படுவார்கள். உதாரணமாக, ஒருநாள் அவர்களை பார்க்க முடியாதவாறு வந்தாலோ அல்லது வெளியே எங்கேனும் செல்வதாக இருந்தாலோ, அதனை அவர்களிடம் சொல்லாமல் சென்றால் கோபத்துடன் அக்கறையாக பேசுவார்கள்.  மிகவும் போசசிவாக இருப்பார்கள். 

அடிக்கடி வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் அக்கறையாக பேசி, அனைவரது மனதிலும் நல்ல இடத்தைப் பிடிக்க முயற்சிப்பார்கள். அதிலும் உங்களால் செய்ய முடியாதவற்றையும், அவர்கள் கஷ்டப்பட்டு செய்து முடிப்பார்கள்.  நட்பிலும் இத்தகைய கோபம், அக்கறை, பரிசு போன்றவை இருக்கும். ஆனால் காதல் இருந்தால், நமக்கே நம்ப முடியாதவாறு சிறிய விஷயங்களுக்கு கூட உணர்ச்சிவசப் பட்டு பேசுவார்கள். எனவே வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு நடப்பது நல்லது. பெரும்பாலும் ஆண்கள் தங்களிடம் காதலை வெளிபடுத்தும் ஆணிடம் தனக்கு காதல் இல்லையெனில், நேரடியாக தங்கள் எண்ணத்தை, முடிவை தெரிவித்து விடுவார்கள். பயமும், வெறுப்பும் கலந்த அந்த உணர்வை ஆணிடம் சற்று கடுமையாக கூட வெளிப்படுத்த அவர்கள் தயங்குவதில்லை அதுவும் நல்லது தான் அனால் ஒரு சில ஆண்கள் ஊமை போல எந்த ரியாக்சனும்  இல்லாமல் நம்மை கொள்வார்கள்.


தொடரும்……..
  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s