நான் ஜான். ஷ்ருஷ்டி மதுரை என்ற LGBTQ organization இருக்கிறது. LGBTQ என்றால் Lesbian, Gay, Bisexual ,Transgender & Queer. ஸ்ருஷ்டி என்பது மாற்று பாலினத்தவருகான (Gender queer) தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டமாகும். பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை, சமூக பார்வையோடு அணுகி, அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வினை உ ருவாக்குவதே ஸ்ருஷ்டி-யின் நோக்கமாகும்.I am the Director of Srishti- ஷ்ருஷ்டி மதுரை இதன் நிறுவனர் கோபி ஷங்கர் (சர்வ புண்யன்).
இந்த பாலின பாகுபாடு தான் துரிங் (Alan Turing) போன்ற பல வல்லுனர்களை கொன்றது.
அரிஸ்டாட்டில் (Aristotle)தொடங்கி ஹார்வே மில்க் (Harvey Milk) வரை நம் முன்தீர்மானிக்கபட்ட தவறான கருத்துக்கள் பற்றி ஒரு அலசல்…
Genders-க்கும் Sexuality-க்கும் உள்ள வேறுபாடு; பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படிக் கருதிக் கொள்கிறீர்கள் என்பதே.
Sexuality என்பது யாரிடம் அல்லது எந்த பாலினத்தவரிடம் நீங்கள் பாலியல் நாட்டம் கொள்கிறீர்கள் அல்லது கவரப்படுகிறீர்கள், யாருடன் உங்கள் பாலியல் எண்ணங்கள் உள்ளது என்பது. Gender differs from sexuality, Gender orientation differs from Sexual orientation.
Gender என்றால் நமக்குத் தெரிவது முதலில் ஆண், பெண். திருநர் (Transgender) திருநங்கைகள் (Transwomen) பற்றி நல்ல விழிப்புணர்வு இருக்கிறது.திருநங்கைகள் (Transwomen) என்போர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள், பிறப்பிலே ஆணாக இருந்து தங்களைப் பெண்ணாக மாற்றிக் கொள்பவர்கள். ஆனால் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற்றிக் கொள்வார்கள் சிலர். இவர்களைத் “திருநம்பிகள்” (Transmen) என்றழைக்கலாம். இவர்களைப் பற்றி அதிகமாகத் தெரிவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள்.ஆனால் இதையும் தாண்டி நிறைய பாலின (Gender) வேறுபாடுகள் இருக்கின்றன.
Gender என்ற சொல் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் அவர்களது இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையில் வகைப்படுத்தப்படுவது. ஆணென்றால் இப்படி பெண்ணென்றால் இப்படி மாதிரியான விடயங்கள் Gender – இல் இருக்கும். இதைத் தாண்டி Transsexuals, Transgenders என்பவர்கள் இப்படியாக சமூகம் வழங்கிய இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையிலான ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறியவர்கள். Transsexuals என்பவர்கள் ஆணாகப் பிறந்து பெண்ணாக முழுமையாக மாறுகின்றவர்கள். இனப்பெருக்க உறுப்புக்கள் மட்டுமன்றி முழுவதுமே பெண்ணாக மாறுவது. இப்படி Transsexuals, Transgenders என்பவைகளைத் தாண்டி நிறைய பிரிவுகள் இவைகளின் கீழ் உள்ளன.
Gender (பாலினம்). அதில் என்னென்ன வகையெல்லாமிருக்கிறது ?
A.Common genders:1. ஆண்,
2. பெண்.
C.பால்புதுமையர்- Genderqueer
1.பால் நடுநர்-Androgynous
2.முழுனர்-pangender
3.இருனர்-Bigender
4.திரினர்-Trigender
5.பாலிலி-Agender
6.திருனடுனர்-Neutrois
7.மறுமாறிகள்-Retransitioners
8.தோற்ற பாலினத்தவர்-Appearance gendered
9.முரண் திருனர்-Transbinary
10.பிறர்பால் உடையணியும் திருனர்-Transcrossdressers
11.இருமை நகர்வு-Binary’s Butch
12.எதிர் பாலிலி-Fancy
13.இருமைகுரியோர்-Epicene
14.இடைபாலினம்-Intergender
15.மாறுபக்க ஆணியால் -Transmasculine
16.மாறுபக்க பெண்ணியல்-Transfeminine
17.அரைபெண்டிர்-Demigirl
18.அரையாடவர்-Demiguy
19.நம்பி ஈர்ப்பினள்-Girlfags
20.நங்கை ஈர்பினன்-Guydykes
21.பால் நகர்வோர்-Genderfluid
22.ஆணியல் பெண்-Tomboy
23.பெண்ணன் –sissy
24.இருமையின்மை ஆணியல்-Non binary Butch
25.இருமையின்மை பெண்ணியல்-Non binary Femme
26.பிறர்பால்உடைஅணிபவர் –Cross dresser
முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர்கள் Anderogynus people இவர்களை “பால்நடுநர்கள்” என்று அழைக்கலாம். இவர்கள் ஆணாக இருக்கலாம். பெண்ணாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் தம்மை எந்த ஒரு பாலினமாகவும் நினைக்க மாட்டார்கள். திருநங்கைகள் தம்மை பெண் என அழைக்கப்பட விரும்புவார்கள். ஆனால் இவர்கள் தம்மை பாலினத்தின் அடிப்படையில் அழைக்கப்பட விரும்புவதில்லை. Gender Neutral என்ற வகையில் அழைக்கப்பட விரும்புவார்கள். அடுத்தவர்கள் Genderless people பாலினமற்றவர்கள். Gender என்பதையே ஏற்க மறுப்பவர்கள். பாலினம் என்பது மனித ஆளுமையை அளவிட ஏற்றதல்ல பாலினத்தைத் தாண்டிய காரணகாரியங்கள் உண்டு என்று கருதுகிறவர்கள்.
இன்னொரு பிரிவினர் Bigenders தம்மை ஆணாகவும் பெண்ணாகவும் நினைத்துக் கொள்பவர்கள். Trigenders என்பவர்கள் தம்மை ஆணாகவும், பெண்ணாகவும், திருனராகவும் எண்ணிக் கொள்பவர்கள்.
Gender Fluid என்பவர்கள் ஒரு நாள் தம்மை ஆணாகவும் மற்றொரு நாளில் பெண்ணாகவும் கருதிக் கொள்பவர்கள். இவர்கள் தொகுப்பாக Gender Queer People என்போம். இன்னும் Gender non conformists என்றெல்லாம் இருக்கிறார்கள்.
Sexual orientation-க்கும் Gender Orientation-க்கும் உள்ள வேறுபாடு Hetero Sexual- Straight எனப்படுவது பாலியல் ரீதியாக ஆண் பெண்ணிடமும், பெண் ஆண்களிடமும் கவரப்படுவது.
Gay, Lesbian பற்றிப் பரவலாக அறிந்திருக்கலாம். ஆணிடம் ஈர்ப்புக் கொள்ளும் ஆண்களை Gay என்றும் தமிழிழ் “நம்பிகள்” என்றும் இவர்கள் Hetero Sexual தமது இணையிடம் எதிர்பார்க்கும் அன்பு, காதல், பாலியல் என அனைத்து உணர்வுகளையும் இன்னொரு ஆணிடம் எதிர்ப்பார்ப்பவர்கள். இதே இரு பெண்களிடையேயான உறவை Lesbian (நங்கை) எனலாம்.
Bi-Sexual இவர்கள் ஆண்களிடமும் கவரப்படுவார்கள் பெண்களிடமும் கவரப்படுவார்கள்.
இவை போன்று பரவலாக அறிந்த பாலின ஈர்ப்பு (Sexual attraction) தவிர்த்து, Poly-Sexual, Asexual, Pansexual என்று நிறைய வகை உண்டு.

Poly-Sexual – ஆண், பெண் தவிர திருநங்கைகள், திருநம்பிகள் என நான்கு வகையினருடனும் பாலியல் கவர்ச்சி உடையவர்கள்.
Pansexual – அனைத்துத் தரப்பினரிடமும் ஈர்ப்புடைய பாலினத்தவர்கள். இவர்கள் தாம் நாட்டம் கொள்ளும் நபர் குறித்த பாலியல் வேறுபாடுகளைப் பற்றிக் கண்டுகொள்ளாதவரகள். அந்நபர் ஆணாகவோ, பெண்ணாகவோ, திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ, Bigender, Trigender போன்ற எத்தகைய தன்மையுடையவரிடமும் இவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.
Girl Fags, Boy Dykes இவர்கள் Straight – வகையில் சேர்ந்த ஆண் பெண்கள்தான். இவர்களின் பாலியல் நாட்டமானது,
Girl Fags – வகைப் பெண்கள் Gay, Bisexual ஆண்களிடம் ஈர்ப்புக் கொள்வார்கள்
Boy Dykes – வகை ஆண்கள் Lesbian, Bisexual பெண்களிடம் ஈர்ப்புக் கொள்வார்கள்.
Intersex என்பவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ கருதப்பட முடியாதவர்கள் பிறப்பின் போதே ஆண் பெண் பாலுறுப்புக்களுடன் பிறந்தவர்கள். ஆணின் இனப்பெருக்க உறுப்புடனும், பெண்ணின் இனப்பெருக்க பால் சுரப்பி உறுப்புடனும் Intersex என்று சொல்லலாம். தமிழில் இடையிலங்கம் எனலாம். ஆண் பெண் உறுப்புகளை ஒருங்கே கொண்டவர்களை True hermophrodites எனலாம். இவர்களை ஆணாகவோ பெண்ணாகவோ கருத முடியாது. இந்நிலையில் Gays, Lesbians, Bisexuals போன்ற பதங்களுக்கு பொருளில்லாமல் போய்விடுகிறது…
Androphilia – ஆண்களிடம் பாலியல் நாட்டம் கொள்பவர்கள்
Gynophilia – பெண்களிடம் பாலியல் நாட்டம் கொள்பவர்கள்.
சமுதாயத்தைப் பற்றி Gays, Lesbians பார்வை என்ன ? அவர்களைப் பற்றி சமுதாயத்தின் பார்வை என்ன ? இருவரிடையே உரையாடல் இல்லாததால் பிரச்சனை இருக்கிறது. அதை சிருஷ்டி சார்பாக ஆராய்ச்சி செய்து சொல்ல வேண்டும்…

தங்களின் உணர்வுகள் மற்றவர்களின் உணர்வுகளுடன் எப்படி வேறுபட்டுள்ளது என்பதை அறிவது.
என்னுடைய நண்பன் ஒரு பெண்ணை ரசிக்கிறான். ஆனால் நானோ ஒரு ஆண் அழகாக இருக்கிறான் என்று நினைக்கிறேன். இப்படித்தான் Gay – இன் நிலை இருக்கும்.
இப்படியான பாலியல் விருப்பத்தின் வேறுபாடுகள் இருக்கும்போது, பல வகையின(பாலின) மக்களை பார்க்கின்ற சமுதாயம் அவர்களை வெறும் உடல் ரீதியான இன்பத்துக்காக இணைந்தவர்கள் என்றே கருதுகிறது. ஆனால் உண்மையில் சமூகம் அவர்களைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறது. அவர்களுக்குள்ளே என்னென்ன விதமான அழுத்தமிருக்கிறதென்றால், வெளியிலிருக்கும் சமூகத்தைப் பார்த்து, நான் இப்படியில்லை நானொரு Straight – தான் என்ற தூண்டலும், அதேவேளை தன்னுடலும் உணர்வும் விரும்பும் சமபாலுணர்வுத்தன்மையும் (Gay & Lesbian ) இருக்கும். இவ்விரு எண்ண முரண்பாட்டில் அவர்களது குழப்பம் இருக்கிறது. எல்லா விடயங்களுக்கும் வழிகாட்டிகள் உண்டு.
எத்தனையோ இயந்திரங்கள் குறித்துப் பேசுகிறோம். ஆனால் ஒரு மனிதனின் அடிப்படை உணர்ச்சியைப் புரிந்து கொள்ள இந்த சமுதாயம் ஒரு நல்ல பார்வையை கொடுத்ததில்லை. அவர்களை உடலுறவு இன்பத்தை நாடுபவர்கள், பெண்ணை (இழிவாக) நடத்துவது போல நடத்துவது, பகடி செய்வது மாதிரியிலான பிரச்சனைகள் சமுதாயம் அளிக்கிறது. இதனால் அவர்களுக்குள் இரட்டை வாழ்க்கை (Double Life) வாழ வேண்டியிருக்கிறது.
ஆணாக இருந்தால் தாய், தந்தை, தங்கையைக் கவனிக்கும் பொறுப்புடனும்,
பெண்ணாக இருந்தால் புகுந்த வீட்டிற்கு செல்லும் வகையில் நடந்து கொள்ளவும் வேண்டும் போன்ற செய்கைகளை மீறுவதாகத்தான் இந்த
மாற்று பாலியல் ஈர்ப்பு உள்ளவர்கள் நடந்து கொள்வார்கள்.
இவர்களது உணர்வு வெளிப்படும் போது இன்னொரு ஆணைத்தான் இவர்கள் தமது அனைத்து வகை உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்காக தேடுவார்கள். பெண் சமபால்
விருப்பம் கொண்டோர் பெண்ணைத்தான் தேடுவார்கள். அதுதான் Gays, Lesbians…இது பாலுணர்வை மட்டுமே சார்ந்தது இல்லை

மூன்றாம் பாலினம் என்கிறோம். மேற்கத்திய சூழலில் தம்மை இந்த மாதிரி வெளிப்படுத்திக் கொண்டவர்கள் யார் ?


திருநங்கைகள், திருநம்பிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன:
திருநங்கைகளும் திருநம்பிகளும் சமூகத்தில் அனுபவிக்கும் நிலை குறித்து முக்கியமாகச் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு அது நிறையத் தெரிந்திருக்கும். திருநங்கைகள் அவர்களை அவர்களே ஏற்றுக்கொள்வது முதல் விடயம். அவர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு அவர்களுடைய குடும்பத்தினர் எத்தனை விழுக்காடுகள் ஏற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் வாழ்க்கையே இருக்கிறது. திருநம்பிகள் பெண்ணாக இருந்து ஆணாக வரும்போது சமூகம் அவர்கள் மீது செலுத்தும் அழுத்தத்தை பின்பு பேசுவோம். திருநங்கைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு வீட்டினரிடமிருந்து கிடைக்கும் அழுத்தங்கள் முதலான பிரச்சனைகள், அவர்களின் மாற்றங்கள் அறிந்த பிறகு வீட்டிலிருந்து துரத்தப்படுதல் வரை. தங்கள் குழந்தை இப்படி வளர்ந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் பெற்றோர்கள் அரவணைத்திருந்தால் அவர்களுக்கு அந்தளவுக்கு சிரமங்கள் இருந்திருக்காது. அவர்களை வீட்டை விட்டு வெளியே விரட்டுவது, என்றான பின்பு அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அவர்களின் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற தெரிவு அவர்களிடம் மட்டுமே இருக்கிறது. உண்மையச் சொன்னால் சமூகத்தின் தெருவோரத்தில்தான் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். திருநங்கை என்று சொன்னால் வெறும் விபச்சாரத்திக்கானவர்கள்தான் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதற்குப் பின்னால் அவர்களின் அழுகுரலை எத்தனை பேர் யோசித்துப் பார்த்திருப்போம். எத்தனையோ பேரிடம் அவர்கள் பாலியல் அத்து மீறலை எதிர்க் கொண்டிருப்பார்கள். கண்டிப்பாக அனுபவித்திருப்பார்கள். நான் ஒரு கதையில் கூட படித்தேன். திருநங்கையின் கதைதான். வன்கலவி அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. காவல்துறை இவர்களை அடிக்கும் போது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது.

அரவான் அர்ச்சுனரின் மகன். அரவம் என்றால் தமிழில் பாம்பு என்று பொருள். அவருக்கு பாம்புக் குறியீடு உள்ளதை நிறைய இடங்களில் பார்க்கலாம். குருக்ஷேத்திரப் போர்க்காலங்களில் காளிக்கு பலி கொடுப்பதற்காக அர்ச்சுனரின் மகனைக் கேட்டார்கள். அதாவது வெட்டிப் பலி கொடுப்பது மாதிரி. அல்லது சில நேரம் அவரை அவரே வெட்டிக் கொண்டு சாகிறது மாதிரியும் இருக்கும். அரவான் தான் இதுவரை தாம்பத்ய இன்பமே அனுபவித்ததில்லை என்கிறார். திருமணத்திற்காக பெண்களைக் கேட்ட போது அடுத்த நாளே இறக்கப் போகிறவர் என்று மறுத்து விடுகிறார்கள். அதனால் விஷ்ணு மோகினி வேடத்தில் வந்து அவருக்கு மனைவியாக இருக்கிறார். பின்பு அரவான் பலி கொடுக்கப்படுகிறார். இந்த அரவான் நமது கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறார்.

எங்கள் மக்கள் வெளிவரும்போதுதான் எங்கள் பிரச்சனைகள், குரல்கள், செய்திகள் மக்களுக்கு வெளிப்பட ஆரம்பிக்கும். திருநங்கைகள் ஊடக வெளிச்சம் படுவதற்கு முன்பிருந்ததற்கும், தற்போதிருக்கும் மக்கள் மனநிலைக்கும் வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு விடயமும் வெளிவரும்போதுதான், கலைத்துறையாகட்டும், இலக்கியத்துறையாகட்டும் சரி எங்களைப் பற்றித் தெரியவரும்…